சூரி, சசிகுமார் உள்ளிட்டோர் நடிக்கும் ‘கருடன்’ படத்தின் முக்கிய அப்டேட் நாளை மாலை 6.01க்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
நகைச்சுவை நடிகர் சூரி விடுதலை படத்தைத் தொடர்ந்து பல படங்களில் நாயகனாக நடித்து வருகிறார்.
அந்த வகையில் சூரி நடிப்பில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம்தான் கருடன். இந்த படத்தில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் வில்லனாகவும் சசிகுமார், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர்.
படத்துக்கான கதையை பிரபல இயக்குநர் வெற்றிமாறன் எழுத துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். ஆக்சன் பாணியில் உருவாகியுள்ள இப்படம் இம்மாதம் (மே) வெளியாகுமென தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
https://twitter.com/sooriofficial/status/1789605316499591658







