வசூலில் தமிழ் திரையுலகை திருப்பி போட்ட ரஜினி! விரைவில் ரெக்கார்ட் பிரேக் செய்யவுள்ள ஜெயிலர்!

விரைவில் விக்ரம் மற்றும் பொன்னியின் செல்வன் படத்தின் மொத்த வசூலை ஜெயிலர் படம்  முந்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.  நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் கடந்த 10-ம் தேதி  உலகம் முழுவதும் வெளியானது.…

விரைவில் விக்ரம் மற்றும் பொன்னியின் செல்வன் படத்தின் மொத்த வசூலை ஜெயிலர் படம்  முந்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் கடந்த 10-ம் தேதி  உலகம் முழுவதும் வெளியானது. இதில், தென்னிந்திய முன்னணி நடிகர்களான மோகன்லால், சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, யோகிபாபு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து இந்த படம் உருவாகி உள்ளது. ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். ஜெயிலர் படத்தில் ரஜினிக்குப் பிறகு சிவ ராஜ்குமாருக்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு உள்ளது.

உலகம் முழுவதும் 7,000 திரைகளிலும் தமிழகத்தில் 1,200 திரைகளிலும் இப்படம் வெளியானது. முதல்நாளில் மட்டும் இப்படம் ரூ.95.78 கோடி வசூல் ஈட்டிய நிலையில், ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் ஒரே வாரத்தில் ரூ.375 கோடிக்கு மேல் வசூல் செய்ததாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது. இதன்மூலம் ஜெயிலர் படத்தின் உண்மையான வசூல் நிலவரம் தெரியவந்துள்ளது.

இதனிடையில், விக்ரம் மற்றும் பொன்னியின் செல்வன் படத்தின் மொத்த வசூலை ஜெயிலர் படம் விரைவில் முந்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இவ்வளவு பெரிய வெற்றியைக் கண்டதால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். தமிழ் திரையுலகில் இது ஒரு புதிய சாதனை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.