மீண்டும் சீசன் களைகட்டத் தொடங்கியுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. இதனால், சுற்றுலாப் பயணிகள் வருகையின்றி, குற்றாலம், களை இழந்தது. இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில், மழை பெய்து வருவதால், குற்றாலத்தில் இதமான சூழல் நிலவி வருகிறது.
பேரருவி மற்றும் ஐந்தருவியில் தண்ணீர் சீராகக் கொட்டி வருகிறது. இதன்காரணமாக, சுற்றுலாப் பயணிகள் மீண்டும் குற்றாலத்திற்கு வருகை தரத் தொடங்கியுள்ளனர். சுற்றுலாப் பயணிகள் வருகையால் குற்றாலம் மீண்டும் களை கட்டியுள்ளது. வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.







