வடிவேலுவை வைத்து புதிய படத்தை இயக்கும் #SundarC! – லேட்டஸ்ட் அப்டேட்!

இயக்குநரும், நடிகருமான சுந்தர்.சி வடிவேலுவை வைத்து ‘கேங்கர்ஸ்’ என்ற புதிய திரைப்படத்தை இயக்க உள்ளார். தமிழ் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் சுந்தர் சி. இவர் மறைந்த பிரபல இயக்குனர் மற்றும் நடிகருமான மணிவண்ணனிடம் உதவி…

#SundarC to direct a new film with Vadivelu! - Latest Update!

இயக்குநரும், நடிகருமான சுந்தர்.சி வடிவேலுவை வைத்து ‘கேங்கர்ஸ்’ என்ற புதிய திரைப்படத்தை இயக்க உள்ளார்.

தமிழ் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் சுந்தர் சி. இவர் மறைந்த பிரபல இயக்குனர் மற்றும் நடிகருமான மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் 1995-ஆம் ஆண்டு முறை மாமன் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் சுந்தர் சி. காமடி கலந்த படங்களை இயக்குவதில் இவர் பெயர் போனவர்.

நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித்குமார், சத்யராஜ், சரத்குமார், கார்த்திக் என பெரிய நடிகர்களை இயக்கி பல வெற்றிப் படங்களை இவர் கொடுத்துள்ளார். குறிப்பபாக இவர் இயக்கிய அருணாச்சலம், அன்பே சிவம் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் இயக்குநராக மட்டும் இல்லாமல் பல படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். இவர் சமீப காலமாக திகில் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.

கடைசியாக இவர் இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 திரைப்படம் நல்ல வசூலை பெற்றதுடன் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. சுந்தர்.சி தற்போது ‘ஒன் 2 ஒன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், சுந்தர்.சி நடிகர் வடிவேலுவை வைத்து புதிய திரைப்படத்தை இயக்க உள்ளார். இத்திரைப்படத்திற்கு ‘கேங்கர்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. இவர்கள் கூட்டணியில் உருவான வின்னர், கிரி, நகரம் படங்களின் நகைச்சுவை காட்சிகள் இன்றளவும் மக்களால் ரசிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.