ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடரை சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் நேரில் கண்டுகளித்தனர்.
ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ வளாகத்தில் நடைபெற்று வருகிறது. 11 ஆண்டுகளுக்குப் பின் சென்னையில் மிண்டும் உலகக்கோப்பை ஸ்குவாஷ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரைத் தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
நேற்றைய தினம் நடைபெற்ற ஸ்குவாஷ் உலகக் கோப்பை மூன்றாவது லீக் ஆட்டத்தில்,
இந்தியா ஜப்பான் அணிகள் மோதின. இதில் இந்தியா 5-1 என்ற புள்ளிகள் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி, அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
இந்த நிலையில் இந்தியா, ஜப்பான் இடையேயான போட்டியை காணத் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், போட்டி நடைபெற்ற சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலுக்கு, சென்னை மாநகராட்சிப் பள்ளியைச் சார்ந்த 50- மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டுப் பார்வையிட்டனர்.







