நெட் ஃபிளிக்ஸின் பிரபலமான வெப் சீரிஸ்களில் ஒன்று ‘ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்’. இந்த தொடரின் முதல் பாகம் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியானது. அதைத் தொடர்ந்து வெளியான இரண்டு பாகங்களும் உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றது. ஸ்பேண்டஸி த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இத்தொடரின் 4வது பாகம் கடந்தாண்டு வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
இதையடுத்து இத்தொடரின் இறுதி சீசன் இந்தாண்டு வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர், 2025 நவம்பரில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் ‘ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் 5’-ன் புதிய டிரெய்லர் வெளியாகி உள்ளது.
இந்த டிரெய்லரில் இதுவரை வெளியான சீசன்களில் இருந்து சில காட்சிகளும், வரவிருக்கும் 5வது சீசனுக்கான சில காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. அத்துடன் 5வது சீசனின் முதல் Volume வருகிற நவம்பர் 26 ஆம் தேதி வெளியாகும் என்றும், தொடர்ந்து இரண்டாவது Volume கிறிஸ்துமஸ் 2025ல் வெளியாகும் என்றும், The Finale 2026 புது வருடத்திற்கு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








