ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கி சூடு – இறுதி அறிக்கை சமர்பிப்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டது குறித்து தனி நபர் ஆணையம் நடத்திய விசாரணையின் இறுதி அறிக்கையை, ஒரு நபர் ஆணைய நீதிபதி அருணா ஜெகதீசன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்பித்தார்.   தூத்துக்குடியில்…

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டது குறித்து தனி நபர் ஆணையம் நடத்திய விசாரணையின் இறுதி அறிக்கையை, ஒரு நபர் ஆணைய நீதிபதி அருணா ஜெகதீசன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்பித்தார்.

 

தூத்துக்குடியில் இயங்கி வந்த காப்பர் உருக்கு ஆலையால் அப்பகுதி மக்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆலையை மூடக்கோரி கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பொதுமக்கள் மற்றும் போராட்டக்காரர்கள் பேரணியாக சென்றபோது, 2 பெண்கள் உட்பட 13 பேரை காவல் துறை சுட்டுக்கொன்றது.இந்த சம்பவம் நாட்டையே அதிர வைத்தது.

 

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசால் அமைக்கப்பட்டது. கடந்த 2018 ஜூன் 4 ஆம் தேதி தொடங்கப்பட்ட விசாரணையில், பல்வேறு தரப்பினரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பல்வேறு கால நீட்டிப்புகளை கடந்த சுமார் 4 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த விசாரணை நிறைவடைந்ததை அடுத்து கடந்த ஆண்டு மே 14 ஆம் தேதி இடைக்கால அறிக்கையை அருணா ஜெகதீசன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்பித்தார்.

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அருணா ஜெகதீசன், தூத்துக்குடியில் நடந்த விசாரணை நேர்மையாகவும் நியாயமகவும் ரகசியம் காக்க்கப்பட்டு நடந்தது என்றார். யாரிடமும் இருந்து எந்த புகாரும் வராமல் விசாரணை நடத்தி முடிக்கபட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். இன்று இறுதி அறிக்கை சமர்பித்துள்ளேன், 5 பாகங்களாக அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது.1300 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டுள்ளது, 1500 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளது, இது தவிர புகைபடங்களும் இணக்கப்பட்டுள்ளது என்றார்.

தனிப்பட்ட முறையிலோ, ஆணையத்திற்கோ எந்த நெருக்கடியும் இல்லை.இது போன்ற துரதஷ்டமான சம்பவம் மீண்டும் நடக்க கூடாது. இறந்து போன 13 நபர்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கல்வி தகுதி அடிப்படையில் பணி வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்த அருணா ஜெகதீசன், 5 பாகங்களும் சேர்ந்து 3000 பக்கம் கொண்ட அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது, 5வது பாகம் அதிக பக்கங்களை கொண்டது என்றும் விளக்கமளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.