அதர்வாவுக்கு ஜோடியாகும் ஸ்ரீதேவியின் 2-வது மகள் குஷி கபூர்!

அதர்வாவுக்கு ஜோடியாக மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷி கபூர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகியோர் அம்மா வழியில் நடிகையாகிவிட்டனர். இளைய…

அதர்வாவுக்கு ஜோடியாக மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷி கபூர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகியோர் அம்மா வழியில் நடிகையாகிவிட்டனர். இளைய மகள் குஷி கபூர் ஜோயா அக்தரின் ஆர்ச்சீஸ் படம் மூலம் நடிகையாகியிருக்கிறார்.

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கவுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளாராம். இந்தப் படத்தை முழுக்க முழுக்க அமெரிக்காவில் படமாக்கத் திட்டமிட்டுள்ளனர்.

அதர்வாவின் கேரியரில் இன்று வரை அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் படமாக இது இருக்கும் என்று சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.