கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கியது! 14 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. 14 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  கேரளத்தில் ஜூன் 1 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. மேலும் வழக்கத்தைவிட…

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. 14 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கேரளத்தில் ஜூன் 1 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. மேலும் வழக்கத்தைவிட இந்த ஆண்டு மழை அதிகதமாக இருக்கும் எனவும் தெரிவித்தது. அதன்படி இன்றே கேரளத்தில் பருவமழை தொடங்கியது. இதன் காரணமாக திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு உட்பட 14 மாவட்டங்களுக்கு வருகிற 2-ந்தேதி வரை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மழையின் போது திடீர் வெள்ளம், நிலச்சரிவு போன்றவை ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க பேரிடர் மேலாண்மை மையம் அறிவுறுத்தி உள்ளது. மேலும் வரும் ஏழு நாட்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. கடல் சிற்றமாக காணப்படும் என்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல கூடாது எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மூன்றாம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.