மீன் சாஸ் டின்னில் நூதன முறையில் கடத்திய தங்கம் பறிமுதல்!

திருச்சி விமான நிலையத்தில் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், ‘மீன் சாஸ் டின்னில்’ நூதன முறையில் கடத்தி வரபட்ட தங்கத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து…

திருச்சி விமான நிலையத்தில் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள்,
‘மீன் சாஸ் டின்னில்’ நூதன முறையில் கடத்தி வரபட்ட தங்கத்தை
பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு
விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் வரும் பயணிகள் தங்களது
உடைமைகளில் தங்கத்தை கடத்தி வருவதும், அயல்நாட்டு கரன்சிகளை கடத்தி
வருவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. கடத்தல் தங்கம் மற்றும் வெளிநாட்டு
கரன்சிகளை அவ்வப்போது சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து திருச்சி வந்த Air Asia
விமான பயணிகளிடம், திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள்
சோதனை மேற்கொண்டனர். அதில், ஆண் பயணி ஒருவர் கொண்டு வந்த பொருட்களை
சோதனை செய்த போது, அவர் கொண்டு வந்த மீன் சாஸ் டின்னில் ரூ.20.32 லட்சம்
மதிப்புள்ள 330 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது. தங்கத்தை
பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-கு. பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.