சல்மான், ரொனால்டோ மற்றும் அவரது மனைவி ஆகியோரின் புகைப்பட-வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
ரியாத்தில் டைசன் ப்யூரி மற்றும் ஃபிரான்சிஸ் நாகன்னோவுக்கு இடையிலான MMA போட்டியில் பல பிரபலங்கள் காணப்பட்டனர். இந்த போட்டியின் போது, சல்மான் கான், அப்து ரோஜிக் மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் வருகை தந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், சல்மான் கான் மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சில புகைப்பட-வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இதில் சல்மான், ரொனால்டோ மற்றும் அவரது மனைவி ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் ஆகியோருக்கு அடுத்ததாகக் காணப்பட்டார்.
சல்மான் மற்றும் ரொனால்டோ இருக்கும் இந்த புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 57 வயதாகும் சல்மான் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் மூத்த பாலிவுட் நடிகர். இந்த நிலையில் ரொனால்டோ மற்றும் அவரது மனைவி ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். ஆனால் அருகில் தனித்து அமர்ந்திருந்த சல்மானின் புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
Megastar salman khan watching match with #CristianoRonaldo #SalmanKhan 🔥🔥 pic.twitter.com/aqMnNayZzC
— Ritesh (@RiteshBani) October 29, 2023