டெட்ரா பாக்கெட் எனப்படும் காகித குடுவையில் மதுபானங்கள் விற்பனை; தமிழ்நாடு அரசு ஆலோசனை

டெட்ரா பாக்கெட் எனப்படும் காகித குடுவையில் மதுபானங்களை அறிமுகம் செய்ய தமிழ்நாடு அரசு ஆலோசனை செய்து வருகிறது. தமிழ்நாட்டில் லைசன்ஸ் இல்லாத 500 டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகள் சமீபத்தில் மூடப்பட்டது. இந்த நிலையில்…

டெட்ரா பாக்கெட் எனப்படும் காகித குடுவையில் மதுபானங்களை அறிமுகம் செய்ய தமிழ்நாடு அரசு ஆலோசனை செய்து வருகிறது.

தமிழ்நாட்டில் லைசன்ஸ் இல்லாத 500 டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகள் சமீபத்தில் மூடப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் நாள் ஒன்றுக்கு சராசரியாக 147 கோடிக்கு மதுபான விற்பனை நடந்து வந்த நிலையில், 500 சில்லறை மதுபான விற்பனை கடைகள் மூடப்பட்டதன் காரணமாக மதுபான விற்பனை 25 சதவீதம் குறைந்துள்ளது.

இதனை ஈடுகட்ட குவாட்டர் பாட்டில்களை விட சிறிய அளவில் இருக்கும் டெட்ரா பாக்கெட் மூலம் மதுபான விற்பனையை துவங்க தமிழ்நாடு அரசு ஆலோசனை செய்து வருகிறது. எளிதில் உடையாது மற்றும் செலவு குறைவு என்பதால் மதுபானங்களை டெட்ரா பாக்கெட்டுகளில் விற்பனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.

டெட்ரா பாக்கெட்டுகளில் கலப்படம் செய்ய முடியாது என்பதாலும், டெட்ரா பாக்கெட்டுகள் மூலம் அதிக லாபம் கிடைக்கும் என்பதாலும் இதை அறிமுகப்படுத்த டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.