வெளியான 5 நாட்களில் ரூ.400 கோடி வசூல்; தொடரும் “ஆதிபுருஷ்” சாதனை!…

ஆதிபுருஷ் திரைப்படம் வெளியான 5 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.400 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. தெலுங்கு நடிகர் பிரபாஸின் ஆதிபுருஷ் திரைப்படம், இந்த ஆண்டின் மிகப்பெரிய பான்-இந்திய படங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது.…

ஆதிபுருஷ் திரைப்படம் வெளியான 5 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.400 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

தெலுங்கு நடிகர் பிரபாஸின் ஆதிபுருஷ் திரைப்படம், இந்த ஆண்டின் மிகப்பெரிய பான்-இந்திய படங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது. ஓம் ரவுத் இயக்கும் இப்படத்தில், பிரபாஸ் ராமராகவும், கிருத்தி சனோன் சீதையாகவும், சன்னி சிங் லட்சுமணனாகவும், சைஃப் அலிகான் ராவணனாகவும் நடித்துள்ளனர். ராமாயணத்தை மையமாக வைத்து  இந்த படத்தை உருவாக்கியுள்ளனர். 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இப்படம் உருவாகியுள்ளது.

இந்திய ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் வெளியான ஒரே நாளில் உலகம் முழுவதும் 140 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் வெளியான முதல் 5 நாட்களில் ரூ.400 கோடி வசூலை பெற்றதாக தகவல் கிடைத்துள்ளது.

இதன்மூலம் இந்த ஆண்டு வெளியான படங்களில் முதல் 5 நாட்களில் 300 கோடி ரூபாய் வசூலை தாண்டிய இரண்டாவது படம் என்ற பெருமையை ஆதிபுருஷ் பெற்றுள்ளது. ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் நடித்த ‘பதான்’ படம் முதல் வார இறுதியில் உலகம் முழுவதும் ரூ 313 கோடி வசூலித்தது குறிப்பிடத்தக்கது. ஆதிபுருஷ் திரைப்படம் நடிகர் பிரபாஸின் சினிமா பயணத்தில் புதிய மைல்கல்லாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.