6 ஆண்டுகளுக்கு பின் சதம் விளாசிய ரிஷப் பண்ட்… 228 ரன்கள் இலக்கு நிர்ணயம் – லக்னோவை வீழ்த்தி முதலிடத்தை பிடிக்குமா பெங்களூரு?

பெங்களூருக்கு 228 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது லக்னோ.

10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் இந்த தொடரில், லீக் சுற்றுப் போட்டிகள் இன்றுடன் நிறைவடைகிறது.

இன்று லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் கடைசி லீக் (70-வது) ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ரஜத் பட்டிதர் தலைமையிலான பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் லக்னோ அணி பேட்டிங் செய்தது.

லக்னோவில் தொடக்க ஆட்டக்காரர்களாக மிட்செல் மார்ஷ், மேத்யூ ப்ரிட்க்ஷ் களமிறங்கினர். இதில் 14 ரன்களுக்கு மேத்யூ ஆட்டமிழக்க கேப்டன் ரிஷப் பண்ட் களமின்றங்கினார். தொடர்ந்து இந்த இணை அதிரடி காட்டியது. பின்னர் 67 ரன்களுக்கு 16வது ஓவரில் மார்ஷ் ஆட்டமிழக்க அடுத்ததாக பூரன் களமிறங்கினார். மறுபக்கம் பண்ட் ஆட்டமிழக்காமல் பவுண்டரி, ஃபோர் என அதிரடி காட்டினார்.

தொடர்ந்து சதம் விளாசினார். தொடர்ந்து பூரன் 19.3 ஓவர்களில் ஆட்டமிழக்க அப்துல் சமத் களமிறங்கினார். இறுதியாக 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 227 ரன்கள் குவித்தது லக்னோ அணி. இதன்மூலம் பெங்களூருக்கு 228 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்போட்டியில் பெங்களூரு வெற்றிப் பெற்றால் 19 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.