14 மாதங்களுக்கு பிறகு களம் இறங்கும் ரிஷப் பண்ட்!

விபத்தில் சிக்கிய இந்திய வீரர் ரிஷப் பந்த் 14 மாதங்களுக்குப் பிறகு இன்று களம் இறங்குகிறார்.   17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது.  இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்…

விபத்தில் சிக்கிய இந்திய வீரர் ரிஷப் பந்த் 14 மாதங்களுக்குப் பிறகு இன்று களம் இறங்குகிறார்.  

17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது.  இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது.  இதையடுத்து, இன்று ஐபிஎல் தொடரில் இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன.  இன்றைய தினத்தின் முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதவுள்ளன.  இதன்படி,  இன்றைய முதல் போட்டி மதியம் 3.30 மணியளவில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இரண்டாவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.  இந்த போட்டி மாலை 7.30 மணிளவில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.  இதனிடையே இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ரிஷப் பந்த் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் கார் விபத்தில் சிக்கினார்.

Image

இதில் படுகாயம் அடைந்த அவர், பல்வேறு அறுவை சிகிச்சைகள் செய்து கொண்ட நிலையில் தற்போது முழு உடற்தகுதியுடன் கிரிக்கெட் களத்துக்கு திரும்பி உள்ளார்.  14 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் கேப்டனாக களமிறங்க உள்ள அவர் மீது அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன.  கடந்த சீசனில் அவர் இல்லாத டெல்லி அணி 10 வது இடத்தை பிடித்திருந்தது.  தற்போது ரிஷப் பந்த் வருகையால் அணியின் செயல் திறன் மேம்படக்கூடும் என்று கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.