அரசு அதிகாரிகள் விமான பயணம் மேற்கொள்ள இருந்த தடையும் நீக்கம் – அரசாணை வெளியீடு…

அரசு பணியாளர்களின் பொது மாறுதல் தடையை நீக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வந்த காலகட்டத்தில் நிதிச் சுமையை குறைப்பதற்காக அரசு அதிகாரிகளுக்கு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.…

அரசு பணியாளர்களின் பொது மாறுதல் தடையை நீக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வந்த காலகட்டத்தில் நிதிச் சுமையை குறைப்பதற்காக அரசு அதிகாரிகளுக்கு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. 2020 மற்றும் 21 ஆண்டு கால கட்டத்தில் நிதி பற்றாக்குறையைச் சமாளிக்க அரசு அதிகாரிகளின் செலவை 50% குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.

அரசு பணியாளர்களுக்கான பயணப்படி தினப்படி ஆகியவையும் ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்திருந்த உத்தரவு இன்று திரும்ப பெறப்பட்டுள்ளது. அதன்படி அரசு பணியாளர்களின் பொது மாறுதல் மற்றும் அரசு அதிகாரிகளின் பயண செலவு ஆகியவற்றிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இனி அரசு அதிகாரிகள் அரசு முறை பயணமாக மேற்கொள்ள அரசு செலவில் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.