ஸ்பெயினில் வரலாறு காணாத மழைப்பொழிவால் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்தது.
ஸ்பெயின் தலைநகர் MADRID-ல் புயல் காரணமாக கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் நீர்நிலைகளிலும் சாலைகளிலும் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் உள்ளே புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
Spain flood! Metro Train 🚋pic.twitter.com/hIrRArhI6w
— Chennai Weather-Raja Ramasamy (@chennaiweather) September 4, 2023
MADRID நகருக்கு அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளதால், பொதுமக்கள் வீட்டை விட்டுவெளியில் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், MADRID நகருக்குச் செல்லும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. கனமழை எச்சரிக்கையால் Alcanar, Tarragona உள்ளிட்ட பகுதிகளில் அத்தியாவசிய சேவைகளுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
⚠️🌊🇪🇸 – Due to heavy rains in #Spain, a major flood also occurred in the province of #Guadamur, in the province of #Toledo. pic.twitter.com/KpI9VrFubw
— 🔥🗞The Informant (@theinformant_x) September 4, 2023







