#RatanTata மறைவு – இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!

தொழிலதிபர் ரத்தன் டாடாவின் மறைவிற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல் தெரிவித்துள்ளார். பிரபல தொழிலாளர்களில் ஒருவரும், டாடா குழுமத்தின் தலைவருமான ரத்தன் டாடா நேற்று உயிரிழந்தார். இவரின் மறைவு அவரது குடும்பத்தை மட்டுமின்றி உலக…

#RatanTata passes away - Music composer A.R. Condolences to Rahman!

தொழிலதிபர் ரத்தன் டாடாவின் மறைவிற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரபல தொழிலாளர்களில் ஒருவரும், டாடா குழுமத்தின் தலைவருமான ரத்தன் டாடா நேற்று உயிரிழந்தார். இவரின் மறைவு அவரது குடும்பத்தை மட்டுமின்றி உலக மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. காரணம் ஒரு தொழில் தலைவராக மட்டுமின்றி, மனிதநேயமிக்க மனிதராகவும் செயல்பட்டவர்தான் ரத்தன் டாடா. தனது வருமானத்தில் பாதியை அறக்கட்டளைகளுக்கு வழங்கியவர். தற்போது இந்த மனிதநேய பண்பாளரின் மறைவுக்கு அவரது உறவினர்கள், குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என அனைவரும் கண்ணீர் செலுத்துகின்றனர்.

இந்த நிலையில், ரத்தன் டாடாவின் உயிரிழப்புக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;

சில மனிதர்கள் வாழும் புத்தகங்கள். தலைமைத்துவம், மரபு, வெற்றி போன்றவற்றை நமக்கு கற்று தருவார்கள். மிக அற்புதமான, மக்கள் எளிதில் அணுகக்கூடிய மனிதர்கள், நம்மை ஊக்குவித்து வழிநடத்துகிறார்கள். இந்தியா ஒரு உண்மையான மகனையும், சாம்பியனையும் இழந்துவிட்டது” என ஏஆர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.