ரூ.250 கோடியை தாண்டிய ரன்வீர் சிங் – ஆலியா பட் திரைப்படத்தின் வசூல் -லேட்டஸ்ட் அப்டேட்!

‘ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி’ படம் ஜூலை 28 இல் வெளியாகி இதுவரை உலகம் முழுவதும் ரூ.250 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரன்வீர் சிங் மற்றும் ஆலியா…

‘ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி’ படம் ஜூலை 28 இல் வெளியாகி இதுவரை உலகம் முழுவதும் ரூ.250 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ரன்வீர் சிங் மற்றும் ஆலியா பட் நடித்துள்ள ‘ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி’ திரைப்படம் திரையரங்குகளில் பெரும் வசூலை ஈட்டி வருகிறது. படத்தில் ஆலியா மற்றும் ரன்வீரின் கெமிஸ்ட்ரி நன்றாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்த ஆண்டின் மிகப்பெரிய பாலிவுட் படங்களில் ஒன்றான ‘ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி’ முதல் நாளிலேயே பாக்ஸ் ஆபிஸில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படத்தின் ஓப்பனிங் எதிர்பார்த்ததை விட சற்று மந்தமாகவே இருந்தது. ஆனால் இரண்டாவது நாளில் பாக்ஸ் ஆபிஸில் இப்படம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்படம் குறித்து மக்களிடையே நிலவும் நேர்மறையான சூழல் காரணமாக, இரண்டாவது வாரத்திலும் பாக்ஸ் ஆபிஸில் அதிசயிக்க வைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த எதிர்பார்ப்பை ‘ராக்கி மற்றும் ராணியின் காதல் கதை’ பூர்த்தி செய்கிறது.

அதன்படி, இப்படம் ஜூலை 28இல் வெளியாகி இதுவரை உலகம் முழுவதும் ரூ.250 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.