லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘விக்ரம்’ படம் உலகநாயகன் கமல், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் என ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்களைக்கொண்டு உருவாகிவருகிறது. கடந்த சில மாதங்களாக தமிழ் சினிமாவில் வரும் உச்சநட்சத்திரங்களின் படங்கள் எல்லாம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரிய அளவில் வெற்றி பெறாத சூழலில் தொடர் வெற்றிகளை கொடுத்துவரும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் என்பதால் இதற்கான எதிர்ப்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.
விக்ரம் படத்திற்கான வேலைகள் தொடங்கியது முதலே first look, டைட்டில் டீஸர், மேக்கிங் வீடியோ, shooting முடித்த வீடியோ, படத்திற்கான டீஸர் காட்சிகள் என அடுத்தடுத்து பல அதிரடியான அப்டேட்டுகளை படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர்.இதனைத்தொடர்ந்து உலகநாயகனே எழுதி பாடி ஆடும் ‘பத்தல பத்தல’ என்ற சிங்கிள் பாடல் வெளியாகி இணையத்தின் சென்சேஷன் ஆனது.
இந்நிலையில் உலகநாயகனின் வெறித்தனமான ரசிகரான சூர்யாவும் இந்த படத்தில் சிறிய மற்றும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற அதிகாரப்பூர்வமற்ற அப்டேட் ஒன்று நேற்று வெளியானது. ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வரும் சூர்யாவை கமல் ஆரத்தழுவி வரவேற்கும் வீடியோ காட்சிகளும் இணையத்தில் வைரலாயின. இந்நிலையில் படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு விழா சென்னையில் நாளை மறுதினம் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாக அறிவித்துள்ளது படக்குழு.
Get ready for the #Vikram Audio and Trailer from May 15 🔥#KamalHaasan#VikraminAction #VikramAudioLaunch #VikramTrailer @ikamalhaasan @anirudhofficial @Udhaystalin @Dir_Lokesh @VijaySethuOffl #FahadhFaasil #Mahendran @RKFI @turmericmediaTM @SonyMusicSouth @RedGiantMovies_ pic.twitter.com/DcQ5CjgpuF
— Raaj Kamal Films International (@RKFI) May 13, 2022
விஜய் திரைப்படங்களுக்கு தான் இதுபோல் பிரம்மாண்டமாக ஆடியோ வெளியீட்டு விழா நடத்தப்படுவது வழக்கம். ஏறத்தாழ நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கமல் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுப்பதால் அவருக்கான மாஸ் tribute ஆக இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த விழாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், தளபதி விஜய் உள்ளிட்ட பல்வேறு உச்சநட்சத்திரங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களும் வர சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதன் மூலம் தன்னுடைய படங்களின் அனைத்து ஹீரோக்களையும் ஓரே மேடையில் ஏற்றவிருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். கமலை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி காந்துக்கும் லோகேஷ் கனகராஜ் ஒரு கிளாஸான மாஸான கதை வைத்திருப்பதாகவும், இந்த விழாவுகு ரஜினியின் வருகையே அந்த படத்திற்கான ஆரம்ப புள்ளியாக அமையலாம் என்றும் காத்துவாக்கில் தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. நீங்க ஆரம்பிங்க லோகேஷ்!
Advertisement: