38 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ரஜினிகாந்த, சத்யராஜ் காம்போ?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள கூலி திரைப்படத்தில், ரஜினிகாந்தின் நண்பராக நடிகர் சத்யராஜ் நடிக்கவுள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது.  தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் நடிகர்கள் ரஜினிகாந்த், சத்யராஜ்.  1980-களில் இருவரும் இணைந்து…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள கூலி திரைப்படத்தில், ரஜினிகாந்தின் நண்பராக நடிகர் சத்யராஜ் நடிக்கவுள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது. 

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் நடிகர்கள் ரஜினிகாந்த், சத்யராஜ்.  1980-களில் இருவரும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர்.  அவற்றில் பல படங்களில் ரஜினிக்கு வில்லனாகவே சத்யராஜ் நடித்துள்ளார்.  இந்நிலையில் 38 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘ஜெயிலர்’ பட வெற்றியைத் தொடர்ந்து,  சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்தின் 171வது படம் உருவாகிறது.  இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.  ரஜினி – லோகேஷ் கனகராஜ் கூட்டணி குறித்து ரசிகர்களிடையே எதிர்பார்ப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.  இதன் டீசர் மற்றும் தலைப்பு கடந்த மாதம் வெளியானது. இப்படத்திற்கு கூலி எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் இதன் படப்பிடிப்பு துவங்க உள்ளது.  இப்படத்திற்கான நடிகர்களும் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.  இதில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன் நடிப்பதாகக் கூறப்படுகிறது.  இந்நிலையில் இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு நண்பராக நடிகர் சத்யராஜ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.