அடுத்த 3 நாட்களுக்கு மழை…! | வானிலை ஆய்வு மையம் தகவல்…

தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை  பெய்யக்கூடும்  என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வடமேற்கு பருவமழை முடிவுக்கு வந்த நிலையில்…

Tamil Nadu , tnrains , Chennai Meteorological Department, seven days
தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை  பெய்யக்கூடும்  என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வடமேற்கு பருவமழை முடிவுக்கு வந்த நிலையில் அதன் பின்னர் மழை பெய்யவில்லை என்பதும் வறண்ட வானிலை நிலவி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். அதிகாலை மற்றும் இரவு நேரத்தில் பனிமூட்டம் மட்டுமே இருந்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது திடீரென ஏற்பட்ட கிழக்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு என்றும்,  தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் பிப். 1, 2-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். பிப்.3 முதல் 5-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். என சென்னை  வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு என்றும், குறிப்பாக நீலகிரியில் ஓரிரு இடங்களில் இரவு/அதிகாலை வேளையில் உறைபனிக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.