முக்கியச் செய்திகள்

குறுகிய தூரம் செல்லும் ரயில்களின் கட்டணத்தை உயர்த்தியது ரயில்வே அமைச்சகம்!

ரயில்வே கட்டணம் உயர்வு குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில் ரயில்வே அமைச்சகம் நேற்று விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து ரயில்வே அமைச்சகம் வெளியுட்டுள்ள அறிக்கையில், “கொரோனா தொற்றின் காரணமாக முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளின் கட்டணமும், குறுகிய தூரம் செல்லும் ரயில்களின் கட்டணத்தையும் உயர்த்தியுள்ளோம். கொரோனா தொற்று தீவிரமாக பரவும் இச்சூழலில் தேவையற்ற பயணங்களை தவிர்க்கவே இந்த தற்காலிக கட்டண உயர்வு” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

உதாரணமாக முன்னர் 25 ரூபாய் உள்ள டிக்கெட் கட்டணம் தற்போது 55 ரூபாயாகவும், 30 ரூபாய் உள்ள டிக்கெட் கட்டணம் தற்போது 60 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் முதல் அலுவலகங்களுக்கு செல்லும் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு மக்களுக்கும் குறுகிய தூரம் செல்லும் ரயில்கள் பெரும் உதவியாய் இருந்தது. தற்போது இந்த கட்டண உயர்வு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

வடிவேலு மீண்டும் நடிக்க வருவதை வரவேற்கிறேன்: விஷால்

Gayathri Venkatesan

பொதுக்குழுவைத் தள்ளிவைக்க வேண்டும்; நீதிமன்றத்தில் கடிதம் தாக்கல் – ஓபிஎஸ்

Arivazhagan Chinnasamy

இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியில் வேலைவாய்ப்பு

G SaravanaKumar