ரஃபேல் குறித்த கோப்புகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை : சீமான் குற்றச்சாட்டு!

ரஃபேல் ஊழல் குறித்த கோப்புகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செயதியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது ; மகாராஷ்டிரா மாநிலத்தில் 5000 கோடி…

ரஃபேல் ஊழல் குறித்த கோப்புகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் செயதியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது ;

மகாராஷ்டிரா மாநிலத்தில் 5000 கோடி கொடுத்து எம்எல்ஏக்களை  வாங்கியுள்ளனர்.ராமேஸ்வரத்தில் பிரதமர் போட்டியிடவில்லை என்றால் நானும் போட்டியிடவில்லை.அவர் போட்டியிட்டால் நான் போட்டியிடுவேன்.இல்லையென்றால் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன். இந்தியா பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் தனியாருக்கு கொடுக்கப்பட்டுள்ளது‌.மத்திய அரசு அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவது மறுக்கமுடியாது.

திமுக வாக்குறுதியை வாக்குறுதியாக தான் பார்க்கிறேன்.அதில் 80 விழுக்காடு நிறைவேற்றியதாக கூறும் நிலையில் 8 விழுக்காடாவது காட்டட்டும். புதிய ஏர்போர்ட், இலவச பேருந்து கேட்காத நிலையில் பேராசிரியர், மீனவர்கள் உள்ளிட்டோர் போராடி வரும் நிலையில் நாடே தெருவில் நிற்கும் நிலையில் நல்லாட்சி கொடுப்பதாக தெரிவிப்பது ஏற்க முடியாது.

நீட் தேர்வு முறையை கொண்டுவந்தது காங்கிரஸ் அப்போது கூட்டணியில் திமுக தான். எங்கள் கொள்கைகளை ஏற்று விஜயை வந்தால் சேர்த்துக்கொள்வோம்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி செல்லாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு அவர் சிறிது காலம் இருந்து விட்டு போகட்டும் என்றார். விஜயலட்சுமி விவகாரம் குறித்த கேள்விக்கு எனக்கு உலகம் முழுவதும் என பல கோடி குடும்பங்கள் உள்ளனர்.நான் இதனை கடந்து செல்வேன் என சீமான் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.