புதுக்கோட்டை: ஏடிஎம் மையங்களில் வாடிக்கையாளர்களிடம் நூதன முறை திருட்டில் ஈடுபட்ட மூவர் கைது!…

பொன்னமராவதி இந்தியன் வங்கி ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க வரும் வாடிக்கையாளர்களிடம் நூதன முறை திருட்டில் ஈடுபட்ட இரு இளைஞர்கள் ஒரு பெண் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வங்கி…

பொன்னமராவதி இந்தியன் வங்கி ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க வரும்
வாடிக்கையாளர்களிடம் நூதன முறை திருட்டில் ஈடுபட்ட இரு இளைஞர்கள் ஒரு பெண் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வங்கி ஏடிஎம் மையத்தில் கார்டினை மாற்றி
நூதன முறையில் பணம் திருடிய மூன்று பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டியை சார்ந்தவர் பழனிச்சாமி மகன் லெட்சுமணன்(39).
இவர் கடந்த 7ம் தேதி தனது மனைவி ஏடிஎம் கார்டினை எடுத்துவந்து பொன்னமராவதி
புதுப்பட்டியில் உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க
வந்துள்ளார்.

அப்போது அருகில் நின்று கொண்டிருந்த ஒருவர் உதவுவது போல நடித்து
ஏடிஎம் கார்டினை மாற்றிக்கொடுத்துள்ளார். அந்தக்கார்டில் பணம் வராததால்
மனைவியிடம் தகவல் கூறியுள்ளார்.அதையடுத்து அக்கவுன்டிலிருந்த பணம் 40 ஆயிரம்
எடுக்கப்பட்டது செல்போன் குறுஞ்செய்தி மூலம் தெரியவந்துள்ளது. தொடர்ந்து
லெட்சுமணன் பொன்னமராவதி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து போலீஸôர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் நேற்று பொன்னமராவதி பேருந்துநிலையத்தில் காவல் உதவி ஆய்வாளர் சோமசுந்தரம், ஏட்டு சார்லஸ், காவலர்கள் விஜய், கலா ஆகியோர் வாகன சோதனை மேற்கொண்டபோது அவ்வழியே வந்த குளித்தலை கீழனங்கவரம் சுகுமார் மகன் சரவணக்குமார்(29), காஞ்சிபுரம் நன்மங்கலம் தங்கராஜ் மகன் தமிழ்ச்செல்வன்(28), அவரது லெட்சுமி(27) ஆகியோரை விசாரித்தபோது முன்னுக்கு பின் முரனாக பேசியுள்ளனர்.

இதையடுத்து தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள் ஏடிஎம் மைய திருட்டில் ஈடுபட்டவர்கள் என தெரியவந்தது. லட்சுமணனின் ஏடிஎம்மில் இருந்து 20000 ரூபாய் பணத்தையும், தனியார் வர்த்தக நிறுவனம் ஒன்றில் (சத்யா பர்னிச்சர்) கடையில் ஏடிஎம் கார்டு மூலம் 20 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் வாங்கியதையும் போலீசாரிடம் கூறியுள்ளனர்.  மேலும் இந்த மூன்று நூதன பேரிடமிருந்து ஏராளமான போலி ஏடிஎம் அட்டைகள் செல்போன், ரொக்க பணம் இருபதாயிரம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.