இன்று விண்ணில் பாய்கிறது PSLV -C55; பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளை நிலைநிறுத்த திட்டம்

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது.  இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் உலகில் முன்னணி நிறுவனங்களின் ஒன்றாக திகழ்ந்து…

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது. 

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் உலகில் முன்னணி நிறுவனங்களின் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. அந்த வகையில் இஸ்ரோ பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது.

அந்த செயற்கைக்கோள்களில் நம் நாட்டுக்குத் தேவையானபேரிடர் மேலாண்மை, காலநிலை மாற்றம், தகவல் தொடர்பு, தொலையுணர்வு உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டிற்காக செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகிறது. மேலும், வணிக ரீதியில் வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும் விண்ணில் நிலை நிறுத்தி வருகிறது.

அந்த வகையில் இன்று  சிங்கப்பூர் நாட்டுக்குச் சொந்தமான டெலியோஸ்-2 எனும் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது. இஸ்ரோவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து மதியம் 2.19 மணிக்கு  பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் மூலம்  விண்ணில் பாய்கிறது.  இந்த செயற்கைக்கோள் மூலம் இயற்கை பேரிடர் கண்காணிப்பு உள்ளிட்ட தகவல்களை பெற முடியும்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.