#ProKabaddiLeague |  தெலுங்கு டைட்டன்ஸ், பெங்கால் வாரியர்ஸ் அணிகள் வெற்றி!

புரோ கபடி லீக் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ், பெங்கால் வாரியர்ஸ் அணிகள் வெற்றி பெற்றன. 11-வது புரோ கபடி லீக் போட்டி ஹைதராபாத்தில் கடந்த 18ம் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 12…

புரோ கபடி லீக் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ், பெங்கால் வாரியர்ஸ் அணிகள் வெற்றி பெற்றன.

11-வது புரோ கபடி லீக் போட்டி ஹைதராபாத்தில் கடந்த 18ம் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும். லீக்கில் ‘டாப்-2’ இடங்களை வசப்படுத்தும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்குள் அடியெடுத்து வைக்கும். 3 முதல் 6 இடங்களை பெறும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதி அதில் வெற்றி பெறும் 2 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில், இந்த தொடரில் நேற்று (நவ.9) நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் – புனேரி பால்டன் அணிகள் மோதின. தொடக்கம் முதலே இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளை குவித்தன. இறுதியில், 34-33 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டனை வீழ்த்தி தெலுங்கு டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு லீக் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் – பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணி 40-29 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இன்று நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தல் யுபி யோத்தாஸ் – யு மும்பா அணிகளும், மற்றொரு ஆடடத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் – ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகளும் மோதுகின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.