நடிகர் விஷாலுக்கு ஜோடியாக விஷால்34 எனப் பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளார். இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்ட தெரிவித்துள்ளது.
ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. விஷாலின் 34 வது படமான இதை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் இணைந்து தயாரிக்கின்றன.
இந்த திரைப்படத்துக்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார் என்ற அறிவிப்பினை கடந்த 2 நாட்களுக்கு முன்பு படக்குழு வெளியிட்டது. இவர்கள் இவரும் சேர்ந்து ‘ஆறு’, ‘சிங்கம்’, ‘வேங்கை’, ‘சிங்கம் 2’, ‘சாமி 2’ என 5 படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.
இந்த திரைப்படம் மருத்துவத்துறையில் நடைபெறும் குற்றங்களை மையமாக கொண்ட கதையாக இருக்காலம் என தகவல்கள் வெளிவந்தன.
அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகும் இந்த படத்தில், விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகி இருக்கிறார். இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. இதற்கு முன் இயக்குநர் ஹரி இயக்கிய ‘யானை’ படத்திலும் பிரியா பவானி நாயகியாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் மூலம் பிரியா பவானி சங்கர் முதல் முறையாக விஷாலுடன் ஜோடியாக நடிக்கிறார். பிரியா பவானி சங்கர் நடிப்பில் டிமாண்டி காலனி – 2 மற்றும் இந்தியன் – 2 உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.








