குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து!

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குடியரசு துணைத்தலைவராக வெற்றி பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குடியரசு துணைத்தலைவராக வெற்றி பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணன் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் ஒரு தமிழர் குடியரசு துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது, ஒட்டுமொத்த தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் கிடைத்த பெருமை.

சவால்களை முறியடித்து அர்ப்பணிப்புப் பணியோடு உழைத்ததன் விளைவாகக் கிடைத்த மாபெரும் வெற்றி. உங்களுக்கு கேப்டன் சார்பாகவும், தேமுதிக சார்பாகவும் வாழ்த்துக்கள். உங்கள் பணி சிறக்க எங்களது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.