ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து இன்றுவரை ஒரு நாள் கூட மோடி விடுமுறை என்று ஒன்றை எடுக்கவில்லை. விடுமுறையை எடுக்காமல் இந்த நாட்டு மக்களுக்காக உழைத்து வருகிறார் என்று பாராளுமன்ற கமிட்டி பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர் பேசியுள்ளார்.
மோடி @ 20 புத்தக அறிமுக விழா சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பாராளுமன்ற கமிட்டி பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர், பாஜக நிர்வாகிகள் கனகசபாபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் பேசிய பிரகாஷ் ஜவடேகர், இந்தியா உலகிலேயே தலைசிறந்த ஜனநாயக நாடாக திகழ்கிறது. அதோடு உலகிலேயே இளமையான நாடும் இந்தியா தான். மோடியை காங்கிரஸ் கட்சியினர் ஒரு காலகட்டத்தில் சாய் வாலா (Chai wala) டீ விற்பவர் என்று விமர்சனம் செய்து வந்தனர். அப்பொழுது டீ விற்றவர் தான் இப்பொழுது இந்தியா என்னும் மிகப்பெரிய ஜனநாயகத்தின் பிரதமராகத் திகழ்ந்து வருகிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் உள்ளன. அவற்றில் பல மாநிலங்களில் பல கட்சிகள் ஆட்சி செய்கின்றனர். இதுவே இந்தியா ஒரு சிறந்த ஜனநாயக நாடாக இருக்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டு. இவ்வாறு பல கட்சிகள் இருக்கும். இந்தியாவில் 2014 ஆம் ஆண்டு மோடி தலைமையிலான பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து ஆட்சியைக் கைப்பற்றியது. மோடி ஒரு சாமானிய மனிதர் மிகவும் எளிய குடும்பத்தைச் சார்ந்தவர்.
மோடி @ 20 தினம் இந்த புத்தகம் பல்வேறு துறையைச் சார்ந்த வல்லுனர்களால் மோடி
ஆட்சியின் சாதனைகள் குறித்து எழுதப்பட்ட ஒரு தொகுப்பாகும். மறைந்த பாடகி லதா
மங்கேஷ்கர், ஜக்கி வாசுதேவ் அமித் திருப்பாதி உள்ளிட்ட பல்வேறு நபர்கள் எழுதிய
( Anthology) தான் இந்த புத்தகம். ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து இன்றுவரை ஒரு நாள் கூட மோடி விடுமுறை என்று ஒன்றை எடுக்கவில்லை. விடுமுறையை எடுக்காமல் இந்த நாட்டு மக்களுக்காக உழைத்து வருகிறார்.
மோடி வாரிசு அரசியலை ஒழிப்பதிலும், ஊழலை ஒழிப்பதிலும் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதிலும் தீவிரமாக இருக்கிறார். அதனால் தான் மக்கள் அவரை விரும்புகின்றனர். மக்களுக்கு பயன் அளிக்கும் புதுப்புது திட்டங்களை கொண்டு வருவதில் மோடி கைத்தேர்ந்தவர். Har Ghar Tiranga ( ஹர் கார் திராங்கா) என்று மோடி அழைப்பு விடுத்ததும் அந்த அழைப்பை ஏற்று நாட்டு மக்கள் அனைவரும் அவரவர் இல்லங்களில் தேசியக் கொடியை ஏற்றினர். அரசு அலுவலகங்களில் மட்டுமே தேசியக்கொடி ஏற்றப்பட வேண்டும் எனும் விதியை மாற்றி மக்களும் அவரவர் இல்லங்களில் தேசிய கொடியை ஏற்றிக் கொள்ளலாம் என்று மோடி உத்தரவிட்டார். இதற்கான பலனை நாம் அனைவரும் கண்கூடாக பார்த்தோம்.
அதுமட்டுமின்றி பத்ம விருதுகள் வழங்கும் முறைகளிலும் பல்வேறு மாற்றங்கள்
நிகழ்ந்துள்ளது சாமானிய மனிதர்கள் பலர் பத்ம விருதுகளை தற்போது பெறுகிறார்கள்.
புதிய கல்விக் கொள்கை மூலம் மாணவர்கள் தங்கள் தாய் மொழியிலேயே தொழில்நுட்ப கல்வியை பயில முடிகிறது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மூலம் அனைவரும் பயன் பெறுகிறார்கள். மகாராஷ்டிராவில் ஆட்டினுடைய கொம்பில் க்யூ ஆர் கோடு ஒட்டப்பட்டுள்ளதை கண்டு ஆச்சரியமடைந்தேன். நான் அமைச்சராக இருந்த காலத்தில் டிஜிட்டல் லிட்டரசி எனும் திட்டம் தொடங்கப்பட்டது. இதில் டிஜிட்டல் பணப்பரிமாற்றம் குறித்து கருத்துக்கள் பகிரப்பட்டது. நாடு முழுவதும் 40 ஆயிரம் மாணவர்கள் கலந்துகொண்ட இந்த கருத்தரங்கில் பத்தாயிரம் பேர் தமிழகத்தில் இருந்து மட்டும் கலந்துகொண்டனர். தமிழக மாணவர்களுக்கு இதற்காக ஒரு சல்யூட் என்று கூறினார்.
-ம.பவித்ரா