’சீதாராமம்’ பட இயக்குநரின் அடுத்த படத்தில் #Prabhas

சீதாராமம் திரைப்படத்தை இயக்கிய ஹனு ராகவப்புடியின் அடுத்த படத்தில் பிரபாஷ் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. ஹனு ராகவப்புடி இயக்கத்தில் துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், கெளதம் மேனன்…

#Prabhas joins 'Seetharamam' director's next film

சீதாராமம் திரைப்படத்தை இயக்கிய ஹனு ராகவப்புடியின் அடுத்த படத்தில் பிரபாஷ் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

ஹனு ராகவப்புடி இயக்கத்தில் துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் தான் சீதா ராமம். நாட்டுப்பற்றை மையமாக கொண்ட ஒரு காதல் கதையை மிக அழகாக இப்படத்தின் மூலம் இயக்குநர் சொல்லி இருப்பார்.

இந்திய ராணுவத்தில் வேலை செய்யும் ராம் ( துல்கர் சல்மான் ) காஷ்மீரில் நடைபெற இருந்த இந்து, முஸ்லீம் கலவரத்தை தடுத்து நிறுத்தியதற்காக  நாடு முழுவதும் துல்கர் சல்மான் கொண்டாடப்படுவார்.  இதற்காக பேட்டி காண வந்த ஊடகத்திடம் தனக்காக யாருமே இல்லை என்பதை அப்பேட்டியில் தெரிவிப்பார் ராம். நாட்டின் பல பகுதிகளில் இருந்து அவருக்கு பாராட்டு கடிதங்கள் வரும். அப்போது சீதா என்ற பெண் துல்கர் சல்மானுக்கு காதல் கடிதம் எழுதுவார். முகவரி இல்லாத சீதாவின் மீது காதல் வயப்படும் ராம் அவரை தேடி செல்வார்.

இருவருக்கும் காதல் மலரும் ஆனால் உண்மையில் அந்த பெண் சீதாவே கிடையாது. சீதாவின் உண்மையான பெயர் இளவரசி நூர் ஜஹான். அதே நேரத்தில் பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த அஃப்ரீன் என்ற கதாபாத்திரம் ராம் எழுதிய காதல் கடிதத்தை சீதாவிடம் கொண்டு சேர்க்க முயற்சி செய்வார். ராம் எழுதிய காதல் கடிதத்தை சீதாவிடம் அஃப்ரீன் கொடுத்தாரா? . ராமுக்கு என்ன ஆனது, ராம் சீதா ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பது தான் சீதா ராமம் படத்தின் கதை.

சீதா ராமம் படம் பான் இந்திய திரைப்படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த நிலையில் சீதாராமம்  வெற்றிப்படத்தின் இயக்குநரான ஹனு ராகவபுடி தனது அடுத்த படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் பிரபாஸ் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளனர். இந்த புதிய படத்தின் பூஜை தொடங்கி படப்பிடிப்பு துவங்கியுள்ளதை பிரபல தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் அறிவித்துள்ளது.

பிரபாஸின் கல்கி 2898 ஏடி திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகி மிகப்பெரிய அளவில் வசூலைக் குவித்தது. இதனைத் தொடர்ந்து நடிகர் பிரபாஷ்  தி ராஜ் சாப் படத்தில் நடித்து வருகிறார். இதற்கு பின்னர்  அனிமல் பட இயக்குநர் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் ஹனு ராகவபுடி இயக்கும் புதிய படத்தில் இணைந்திருப்பது உறுதியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.