மதுரவாயலில் மின் கம்பியில் பற்றிய தீ ஆபத்தை உணராமல் தண்ணீர் ஊற்றி அனைத்த இளைஞரால் பரபரப்பு எற்பட்டது.
சென்னை மதுரவாயல் எம் . எம். டி .ஏ காலனி 6 வது பிளாக் 26 வது தெரு சந்திப்பில் மின் இரவு மின் கம்பத்தில் செல்லக்கூடிய மின் கம்பியின் வயர்கள் திடீரென தீப்பற்றி எறிய தொடங்கியது. மேலும் மின் வயர்கள் தீப்பிடித்து எரிந்ததில் தீப்பொறிகள் பறந்ததால் அப்பகுதியில் வண்டியில் மற்றும் நடந்து சென்றவர்கள் அலறி அடித்து ஓட்ட பிடித்தனர்.
இந்த நிலையில் மின் வயர்களில் எரிந்து கொண்டிருந்த தீயை மின்கம்பத்தின் அருகே இருந்த கட்டிடத்தின் மாடியிலிருந்து இளைஞர் ஒருவர் ஆபத்தை உணராமல் ஒரு ஜக்கில் தண்ணீரை எடுத்து தீயை அணைத்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் மின் வயர்கள் செல்லக்கூடிய இடத்தில் கேபிள், டெலிபோன், இணைய சேவை போன்ற உள்ளிட்ட ஒயர்கள் ஒன்றோடு ஒன்றாக உரசி செல்வதால் இதுபோன்று அடிக்கடி உயர் மின்னழுத்தம் காரணமாகத் தீப்பற்றி எரிவது வழக்கமாக உள்ளது.
எனவே மதுரவாயல் மின்வாரிய ஊழியர்கள் இதனை கவனத்தில் எடுத்து பெரும் ஆபத்து ஏற்படும் முன் அனுமதியின்றி சொல்லக்கூடிய வயர்களை முறைப்படுத்தத் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுக்கு அறிவுறுத்த வேண்டுமென அப்பகுதி வாசிகள் கோரிக்கை வைக்கின்றன. மேலும் திடீரென மின்வயர் தீப்பற்றி எரிந்த நிலையில் அப்பகுதியில் சிறிது நேரம் மின்வெட்டு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.







