அந்த வகையில் அரசியல் தலைவர்களில், பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தவெக தலைவர் விஜய், மநீம தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் தொடர்ச்சியாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திரைப் பிரபலங்களில் கவிஞர் வைரமுத்து, விஜய் சேதுபதி, தனுஷ் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு என்னுடைய இனிய பொங்கல் வாழ்த்துகள்.
— Rajinikanth (@rajinikanth) January 14, 2025
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப்பக்க பதிவில், “உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு என்னுடைய இனிய பொங்கல் வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.







