ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவிடம் போலீஸ் விசாரணை!

திறன் மேம்பாட்டு ஊழல் தொடர்பாக சிறையில் உள்ள ஆந்திர பிரதேச முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவிடம் சிஜடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திறன் மேம்பாட்டு ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள தெலுங்கு தேசம்…

திறன் மேம்பாட்டு ஊழல் தொடர்பாக சிறையில் உள்ள ஆந்திர பிரதேச முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவிடம் சிஜடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திறன் மேம்பாட்டு ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவிடம் சிஐடி போலீசார் இன்று விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

ஆந்திர பிரதேச முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு மீது திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். சந்திரபாபு நாயுடு கைதை கண்டித்து ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் தெலுங்கு தேச கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் சந்திரபாபு நாயுடு விஜயவாடா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்திரபாபு நாயுடுவை 14 நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது. இதனையடுத்து அவர் ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சந்திரபாபு நாயுடு விசாரிக்க 2 நாள் போலீஸ் காவல் வழங்கி லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இதனையடுத்து மத்திய சிறையில் சந்திரபாபு நாயுடுவிடம் 12 பேர் கொண்ட சிஐடி அதிகாரிகள் குழு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்றும் நாளையும்(சனி, ஞாயிறு) காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை விசாரணை நடைபெறுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.