எகிப்து சென்றடைந்தார் பிரதமர் மோடி; உற்சாகமாக வரவேற்பு!

அமெரிக்காவில் தனது பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி, அங்கிருந்து 2 நாள் பயணமாக எகிப்து புறப்பட்டுச் சென்றார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பின் பேரில் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ள பிரதமர் மோடி, 23-ம்…

அமெரிக்காவில் தனது பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி, அங்கிருந்து 2 நாள் பயணமாக எகிப்து புறப்பட்டுச் சென்றார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பின் பேரில் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ள பிரதமர் மோடி, 23-ம் தேதி வரை அமெரிக்காவில் தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். நேற்று நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பங்கேற்றார். பின்னர், வாஷிங்டனில் உள்ள ஆண்ட்ரூஸ் விமான தளத்திற்கு வந்தடைந்ததும், பிரதமர் நரேந்திர மோடிக்கு அங்கு அரசு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, பிரதமர் மோடிக்கு வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. வெள்ளை மாளிகை நுழைவுவாயிலுக்கு வந்து பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் அவரது மனைவி ஜில் பைடனும் வரவேற்றனர். பின்னர் துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்பட அமைச்சர்களும் பிரதமர் மோடியுடன் கைகுலுக்கி வரவேற்றனர். அப்போது பிரதமர் மோடிக்கு அதிபர் பைடன் பழமையான புத்தகம் மற்றும் கோட்டக் கேமரா, ராபர்ட் ஃப்ரோஸ்டின் எழுதிய கவிதையின் முதல் பதிப்பு உள்ளிட்டவற்றை பரிசாக வழங்கினார்.

பின்னர் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் இணைந்து வழங்கிய அரசு விருந்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமை விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது அவருக்கு பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட மூன்று வகையான சைவ உணவுகள் பரிமாறப்பட்டன. பிரதமர் மோடிக்கு வெள்ளை மாளிகையில் வழங்கப்பட்ட இந்த இரவு விருந்து நிகழ்ச்சியில் தொழிலதிபர் அம்பானி தனது மனைவியுடன் கலந்து கொண்டார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர்கள் சத்ய நாதெல்லா, சுந்தர் பிச்சை, மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா உள்ளிட்டோரும் இரவு விருந்தில் பங்கேற்றனர்.

இந்த நிலையில், அமெரிக்காவில் தனது பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி, அங்கிருந்து 2 நாள் பயணமாக எகிப்து புறப்பட்டுச் சென்றார். விமான நிலையத்தில் எகிப்து பிரதமர் முஸ்தபா மாட்போலி உற்சாகமாக வரவேற்றார். எகிப்து நாட்டிற்கு முதல் முறையாக பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.