கீழே விழுந்தாலும் செல்போன் உடையாது : வந்து விட்டது air bag case!

ஏர்பேக் உடன் போன் கேஷ் (air bag case) தொடர்பான வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. என்ன தான் கவனமாக இருந்தாலும் செல்போன் கீழே விழுவதை தவிர்க்க முடியாது. வீட்டில் குழந்தைகள் எடுத்து விளையாடும்…

ஏர்பேக் உடன் போன் கேஷ் (air bag case) தொடர்பான வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

என்ன தான் கவனமாக இருந்தாலும் செல்போன் கீழே விழுவதை தவிர்க்க முடியாது. வீட்டில் குழந்தைகள் எடுத்து விளையாடும் போது செல்போன் கீழே விழுந்து உடைகிறது. ஃபோனை வாங்கும் போது, அதை பாதுகாக்க டெம்பர்டு கிளாஸ் மற்றும் ஃபோன் கேஸ் போடுகிறோம். அப்படி இருந்தும் செல்போன் உடையாமல் இருப்பதில்லை.

இந்நிலையில், இன்ஸடாவில் ஏர்பேக் உடன் போன் கேஷ் தொடர்பான வீடியோ லைக்குகளை அள்ளிக் குவித்து வருகிறது. கார் விபத்தின் போது எவ்வாறு பலூன் விரிந்து முகத்தை மூடி ஓட்டுநர் மற்றும் இருக்கையில் அமர்ந்துள்ளவர்களை பாதுகாக்குமோ அதே போல், செல்போன் கீழே விழும் போது பலூன் விரிந்து அதனை பாதுகாக்கிறது. இந்த வீடியோவை சுமார் 55 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.