29.7 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

பேரறிவாளன் வழக்கு கடந்து வந்த பாதை

பேரறிவாளன் கைது செய்யப்பட்டது முதல் வழக்கில் இருந்து உச்சநீதிமன்றத்தால் இன்று  விடுவிக்கப்பட்டது வரை அவரது வழக்கு கடந்துவந்த பாதை குறித்து தற்போது பார்ப்போம்.

  • 1991, மே 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார்
  • 1991, ஜூன் 11ம் தேதி பேரறிவாளன் கைது
  • 1998, ஜனவரி 28ம் தேதி நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 26 பேருக்கு தூக்குத்தண்டனை விதித்தது சிறப்பு நீதிமன்றம்

  • தூக்கு தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் 1999, மே 11ம் தேதி சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி ஆகிய 4 பேருக்கு மட்டும் தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்
  • தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி 4 பேரும் தாக்கல் செய்த மறு ஆய்வு மனு உச்சநீதிமன்றத்தில் 1999 அக்டோபர் மாதம் தள்ளுபடி
  • தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரின் கருணை மனுக்களை 1999ம் ஆண்டு தள்ளுபடி செய்தார் ஆளுநர் பாத்திமா பீவி
  • ஆளுநரின் உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்றம், அமைச்சரவை முடிவின் மீதே ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என கருத்து தெரிவித்தது
  • 2000ம் ஆண்டு முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையின் மூலம் நளினியின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது
  • தொடர்ந்து பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்களை அனுப்பினர்
  • 2000ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை அப்போதைய குடியரசுத்தலைவர்களாக இருந்த கே.ஆர். நாராயணன், ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஆகியோர் கருணை மனுக்களை நிலுவையில் வைத்தனர்; 2011ம் ஆண்டு இவர்களின் கருணை மனுக்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார் குடியரசு தலைவர் பிரதீபா பாட்டில்

  • 11 ஆண்டுகளுக்கும் மேலாக கருணை மனுக்கள் நிலுவையில் வைக்கப்பட்டதற்கு எதிராக தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மூவரையும் தூக்கிலிட தடை விதித்தது; பிறகு இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது
  • 2014 பிப்ரவரி 18ம் தேதி உச்சநீதிமன்றத்தில் சதாசிவம் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு மரண தண்டனையை ரத்து செய்து தீர்ப்பளித்தது
  • தொடர்ந்து தமிழ்நாடு அமைச்சரவை எடுத்த தீர்மானத்தின்படி எழுவரும் விடுவிக்கப்படுவதாக அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்; தமிழ்நாடு அரசின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகி மத்திய அரசு தடையாணை பெற்றது

  • இந்த வழக்கு மத்திய – மாநில அரசுகளின் அதிகாரம் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் வருவதால், வழக்கு, 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது; இதனையடுத்து இப்ராஹிம் கலிபுல்லா தலைமையிலான 5 பேர் அடங்கிய அமர்வு, எழுவரையும் 161வது பிரிவின் கீழ் விடுதலை செய்தால் மத்திய அரசின் ஒப்புதல் தேவையில்லையென அறிவித்தது
  • வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான மூவர் அமர்வு 7 பேரை விடுவிப்பது தொடர்பாக 161-வது பிரிவின் கீழ் ஆளுநர் முடிவெடுக்க வேண்டுமென தீர்ப்பளித்தது. இதன்தொடர்ச்சியாக 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்தது
  • 2022, மார்ச் 9ம் தேதி பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது
  • 2022, மார்ச் 18ம் தேதி பேரறிவாளனை வழக்கில் இருந்து விடுவித்து உச்சநீதிமன்றம் உத்தரவு
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading