பாரிஸ் ஒலிம்பிக் : மகளிர் பேட்மிண்டன் முதல் சுற்றில் பிவி சிந்து வெற்றி!

பாரிஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் மாலத்தீவு வீராங்கனையை வீழ்த்தி பிவி சிந்து வெற்றி ‌பெற்றுள்ளார். பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் 2024ஆம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.…

பாரிஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் மாலத்தீவு வீராங்கனையை வீழ்த்தி பிவி சிந்து வெற்றி ‌பெற்றுள்ளார்.

பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் 2024ஆம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. 100 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்ஸில் கோலகலமாக ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் போட்டியின் இரண்டாவது நாளான இன்று இந்திய வீராங்கனையான பிவி சிந்து பேட்மிட்டனுக்கான மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ‌பெற்றுள்ளார். இதன்மூலம் தனது வெற்றிக்கான முதல் அடியை எடுத்து வைத்து அடுத்த சுற்றிற்கு முன்னேறியுள்ளார்.

மாலத்தீவு வீராங்கனையான ஃபாதிமத் நபாஹாவை 21-9, 21-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றிப் பெற்றுள்ளார். இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற ஒரே வீராங்கனை என்ற புகழைப் பெற்றவர் சிந்து. இந்த ஒலிம்பிக்கிலும் பதக்கம் வெல்வாரா என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும். மேலும் இன்று நடைபெற உள்ள துப்பாக்கிச் சுடுதல், வில்வித்தை, டேபிள் டென்னிஸ் போன்ற போட்டிகளிலும் இந்திய வீரர்கள் பங்கேற்கின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.