பான் இந்தியா படம் இயக்கும் ஆக்ஷன்கிங் அர்ஜுன்; இன்று முதல் படப்பிடிப்பு துவக்கம்!

அர்ஜுன் தனது ஸ்ரீராம் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் மூலம் தயாரிக்கும் 15 வது படத்தை அவரே கதை,திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக, பலரும் கவனிக்கும் ஒரு முக்கிய…

அர்ஜுன் தனது ஸ்ரீராம் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் மூலம் தயாரிக்கும் 15 வது படத்தை அவரே கதை,திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக, பலரும் கவனிக்கும் ஒரு முக்கிய நடிகராக இருக்கிறார் அஜித். கடைசியாக இவரது நடிப்பில் துணிவு திரைப்படம் வெளியாகி இருந்தது. இப்படத்தை அடுத்து அஜித் லைகா நிறுவன தயாரிப்பில் படம் நடிக்கிறார் என்பது உடனே முடிவானது. ஆனால் இயக்குநர் மட்டும் யாரென்று தெரியாமல் இருந்தது.

இந்த நிலையில் தான் அஜித்தின் பிறந்தநாளான மே 1-ம் தேதி லைகா நிறுவனம், மகிழ்திருமேனி, அஜித்தின் புதிய படத்தை இயக்கவுள்ளார் என அறிவித்தது. இவர் தமிழில் தடையறத் தாக்க, மீகாமன் மற்றும் தடம் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும் கடந்த வருடம் கலகத்தலைவன் என்ற ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தை நடிகர் உதயநிதி நடிப்பில் இயக்கி வெற்றி கண்டார். இந்த சூழலில் நடிகர் அஜித்தும், இயக்குனர் மகிழ் திருமேனியும் தற்போது கைகோர்த்துள்ளனர்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் ”விடாமுயற்சி” படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இது அஜித் குமார் நடிக்கும் 62-வது படம். அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த நீரவ் ஷா தான் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.

கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நடிகர் அஜித் வெளிநாட்டில் பைக் பயணத்தில் பிசியாக உள்ள நிலையில், இந்தப் படத்தின் சூட்டிங் தள்ளிப் போனதாக தகவல்கள் வெளியானது.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அர்ஜூன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, அஜித்துடன் மங்காத்தா படத்தில் அர்ஜுன் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஆக்ஷன் கிங் அர்ஜுன் தனது ஸ்ரீராம் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் மூலம் தயாரிக்கும் 15 வது படத்தை அவரே கதை,திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.  தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாக்க இருக்கிறார். கன்னட சினிமாவில் பிரபல நடிகரான உபேந்திராவின் அண்ணனின் மகனான நிரஞ்சன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக  அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் நடிக்கிறார். மற்றும் சத்யராஜ், பிரகாஷ் ராஜ், ஜெயராம் முக்கிய கதாபாதிரத்தில் நடிக்க இவர்களுடன் அர்ஜுனும் இணைந்து நடிக்கிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.