முக்கியச் செய்திகள்சினிமா

அரண்மனை 4 – புது அப்பேட் கொடுத்த படக்குழு!

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அரண்மனை 4 படத்தின் ரிலீஸ் தேதியையும், படத்தின் முதல் பாடலையும் படக்குழு வெளியிட்டுள்ளது. 

கடந்த 2014-ம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான திரைப்படம் அரண்மனை. இந்த படம் பிரமாண்ட வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து அரண்மனை படத்தின் 2ம் பாகம் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. முதல் மற்றும் இரண்டாம் பாகங்களை தொடர்ந்து அரண்மனை 3 வெளியானது. இத்திரைப்படத்தில் சுந்தர் சி, ஆர்யா, ராசி கன்னா, ஆண்ட்ரியா, விவேக், யோகிபாபு என தமிழ் திரைப்பட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருந்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நகைச்சுவை கலந்த ஒரு திகில் படமாக உருவாகிய இப்படத்திற்கு சுந்தர் சி – குஷ்பூ இணைத்து அவ்னி சினிமேக்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க  உதயநிதி ஸ்டாலின் தனது ‘ரெட்  ஜெயன்ட் மூவிஸ்’  மூலம் உலகம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டது.

Achacho - Promo Song | Aranmanai 4  | Sundar.C | Tamannaah | Raashii Khanna | Hiphop Tamizha

இந்நிலையில் படத்தின் நான்காம் பாகமும் உருவாகியுள்ளது. இந்த பாகத்திலும் சுந்தர் சி நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் தமன்னா, ராஷி கண்ணா, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். அவ்னி சினிமேக்ஸ் பி லிமிடட் சார்பில் குஷ்பு  தயாரிக்கிறார். குஷ்புவின் பிறந்தநாள் அன்று படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டது.

இதனையடுத்து படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் படம் ஏப். 26 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. மேலும்  ஹிப்ஹாப் ஆதி இசையில் படத்தின் முதல் பாடலான ‘அச்சச்சோ’ பாடலை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இப்பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

அரிய வகை அணில் குட்டிகள் பறிமுதல்

EZHILARASAN D

மு.க.ஸ்டாலினுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை

Halley Karthik

மூளை நரம்பு நோயால் பாதிக்கப்பட்ட மகன்: மாவட்ட ஆட்சியரிடம் உதவிக்கோரும் தாய்

Niruban Chakkaaravarthi

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading