பா.ரஞ்சித் தயாரிக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!

இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் நடிகர் குரு சோமசுந்தரம் நடிக்கும்  திரைப்படத்திற்கு பாட்டல் ராதா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இயக்குநர் பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன்ஸ் வாயிலாக பல படங்களை தயாரித்து வருகிறார். தற்போது…

இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் நடிகர் குரு சோமசுந்தரம் நடிக்கும்  திரைப்படத்திற்கு பாட்டல் ராதா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இயக்குநர் பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன்ஸ் வாயிலாக பல படங்களை தயாரித்து வருகிறார். தற்போது நீலம் ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் பைசன், மலையாளத்தில் பாபா புகா, தண்டகாரண்யம் போன்ற படங்கள் உருவாகி வருகின்றன. இந்நிலையில் நீலம் ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் 9 ஆவது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் குரு சோமசுந்தரம் மற்றும் சஞ்சனா நடராஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு பாட்டில் ராதா என பெயர் வைக்கப் பட்டுள்ளது. ஷான் ரோல்டன் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி மலையாள நடிகர்கள் டொவினோ தாமஸ் , பாசில் ஜோசப் , பார்வதி திருவொத்து, நிமிஷா சஜயன் , ஸ்வேதா மேனன் உள்ளிட்டவர்களும்  வெளியிட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.