நமக்கு ஹீரோ தூய்மைப் பணியாளர்கள்தான்-மேயர் பிரியா பாராட்டு

இன்றைக்கு நமக்கு ஹீரோவாக இருப்பது நமது தூய்மை பணியாளர்கள்; தூய்மை பணியாளர்கள் இருப்பதால் தான் இந்த சென்னை மாநகராட்சி மிகத் தூய்மையாக இருக்கிறது என்று மேயர் பிரியா தெரிவித்தார். சென்னை மாநகராட்சி சார்பாக துப்புரவுப்…

இன்றைக்கு நமக்கு ஹீரோவாக இருப்பது நமது தூய்மை பணியாளர்கள்; தூய்மை பணியாளர்கள் இருப்பதால் தான் இந்த சென்னை மாநகராட்சி மிகத் தூய்மையாக
இருக்கிறது என்று மேயர் பிரியா தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சி சார்பாக துப்புரவுப் பணிகளில் சிறப்பாகச் செயல்படும்
தொழிலாளர்களுக்கான பரிசுகள்,  சான்றிதழ்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சென்னை மேயர் பிரியா கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.

அதைத் தொடர்ந்து மேடையில் பேசிய மேயர் பிரியா கூறியதாவது:

சென்னையில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்துக் கொடுப்பதற்கு ஒரு
விழிப்புணர்வானது பெருநகர சென்னை மாநகராட்சி சார்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் முதல் அமைச்சர் ஸ்டாலினால் ஜூலை 3ம் தேதி மாஸ் கிளீனிங் பணி தொடங்கி வைக்கப்பட்டது.

சென்னையில் உள்ள வீடுகளில் மக்கள் குப்பைகளை தரம் பிரித்து கொடுத்து
வருகிறார்கள். வீட்டில் இருந்தே குப்பைகளை தரம் பிரிந்து கொடுப்பதற்கு மாநகராட்சி
சார்பாக தெறிவித்திருந்தோம். அது சிறப்பாக நடந்து வருகிறது. 70 சதவீத சென்னை
மக்கள் இதனை செய்து வருகிறார்கள். மேலும் இன்றைக்கு நமக்கு ஹீரோவாக இருப்பது
நமது தூய்மை பணியாளர்கள்தான்.

தொடர்ந்து சாலிட் பேஸ் மேனேஜ்மென்ட் பணியானது பெருங்குடியில் நடைபெற்று
வருகிறது. குப்பைகளை தரம் பார்த்து பிரித்து தருவதற்கு இதேபோல் கொடுங்கையூரில் இந்த பயோ மைனிங் ப்ராசஸ் நடைபெற உள்ளது.


மேலும் தூய்மைப் பணியாளர்கள் இருக்கும் இந்த சென்னை மாநகராட்சி மிகத் தூய்மையாக இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு அங்கீகாரம் அவர்களுக்கு கொடுப்பது
பாராட்டுக்குரியது என்றார் மேயர் பிரியா.

இந்த நிகழ்வில் 138 விருதுகள் வழங்கப்பட்டது. தூய்மைப் பணியாளர்கள், தன்னார்வலர்கள், குடியிருப்புச் சங்கங்கள் என பல பிரிவுகளில் விருது
வழங்கப்பட்டது.

தொடர்ந்து பேசிய மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார், “பல பெருமைகளை சிறப்புகளை கொண்டு இந்த மாநகராட்சி செயல்பட்டு வருகிறது.  தொடர்ந்து நான் பெங்களூருக்கு சென்றபோது பெங்களூரு மாநகராட்சி எப்படி செயல்பட்டு வருகிறது என்று பார்த்தபோது சென்னை மாநகராட்சி மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என்று அறிந்தேன். என்னுடைய தனிப்பட்ட முறையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.