34.4 C
Chennai
September 28, 2023
முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

நடிகர் ரஜினிகாந்துடன் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் திடீர் சந்திப்பு!

நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீசானது. இதில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ரசிகர்களின் பலத்த வரவேற்பை பெற்ற இப்படம் முதல் வார முடிவில் உலகம் முழுவதும் சுமார் ரூ.375.40 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவித்தது.
இதுவரை சுமார் 600 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

அத்துடன் ஜெயிலர் படம் இம்மாதம் 7ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. அதற்கான போஸ்டர் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று திடீரென சந்தித்து பேசினார். நாளை காஞ்சிபுரத்தில் ஓபிஎஸ் சுற்றுப்பயணத்தை துவங்க உள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்தை போயஸ் தோட்ட இல்லத்தில் ஓபிஎஸ் சந்தித்துள்ளார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சந்திப்பின்போது தமிழகத்தின் அரசியல் சூழல் தொடர்பாக இருவரும் பேசியதாக கூறப்படுகிறது. 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram