“ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில் 70 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளனர்” -சம்பவத்தை நேரில் ஆய்வு செய்த எம்.பி.செல்லகுமார்

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில் 70 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டு உள்ளதாக விபத்தை நேரில் சென்று  ஆய்வு செய்த கிருஷ்ணகிரி எம்.பி.செல்லகுமார் தெரிவித்தார்.  கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல்…

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில் 70 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டு உள்ளதாக விபத்தை நேரில் சென்று  ஆய்வு செய்த கிருஷ்ணகிரி எம்.பி.செல்லகுமார் தெரிவித்தார். 

கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்களின் இணைக்கும் விதமாக இதன் வழித்தடம் அமைந்துள்ளது.

இந்த நிலையில் கோரமண்டல் ரயில் வண்டி எண் 12841 நேற்று மாலை 3:30  வழக்கம் போல மேற்கு வங்க மாநிலம் சாலிமரிலிருந்து புறப்பட்டது. இந்த ரயில் இன்று மாலை 4:50க்கு சென்னை வந்து சேரும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த ரயில் மேற்கு வங்க மாநிலத்தை கடந்து ஒரிசாவின் பஹனகா ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருக்கும் போது சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது ரயில் நேருக்கு நேர் மோதியதில் இரயிலின் பெட்டிகள் தடம் புரண்டன.

கோரமண்டல் ரயில் விபத்துக்குள்ளானதில் கிட்டத்தட்ட 10 முதல் 12 பெட்டிகள் தடம்புரண்டு பக்கத்து தண்டவாளத்தில் விழுந்தன. இதனால் அந்த தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த யஷ்வந்த்பூர் ரயில் தடம்புரண்ட பெட்டிகள் மீது மோதியதால் அந்த ரயிலும் தடம்புரண்டது. இந்த விபத்தில் 288 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, ஒடிசா விபத்தை நேரில் சென்று கிருஷ்ணகிரி எம்.பி.செல்லகுமார் ஆய்வு செய்தார். அப்போது எம்.பி செல்லகுமார் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக தகவல் அளித்தார். அதில், “ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில் 70 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டு உள்ளது. அதில் தமிழர்கள் யாரும் இல்லை.விபத்தில் சிக்கியவர்களில் பெரும்பாலும் சென்னை, பெங்களூர் நகரங்களுக்கு கூலி வேலைக்கு சென்றவர்கள் தான் என தெரிவித்தார்.

மேலும், விபத்து நடந்த உடன் மீட்பு பணிக்கு தேவையான வசதிகள் இல்லாததால் அதிகாரிகள் கண் முன்னே பல உயிர்கள் பரிப்போனது.பாலசோர் மாவட்டத்தில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை மேம்படுத்தாமல் உள்ளது. அதனால் உரிய சிகிச்சை வழங்கப்படவில்லை என காங்கிரஸ் பொருப்பாளரும், கிருஷ்ணகிரி எம்.பியுமான செல்லகுமார் நியூஸ் 7 தமிழுக்கு அளித்த தகவலில் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.