சங்ககிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியில் ராஜதுரை- பிரியா தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில் இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இந்த நிலையில் பிரியாவின் பெற்றோர், தங்களின் உறவினர்களுடன் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாத நிலையில், பிரியா தன்னுடைய குழந்தையை அழைத்துக்கொண்டு குடும்பத்தினருடன் தாய் வீட்டிற்கு புறப்பட்டார். பிரியாவின் குடும்பத்தினர் பெருந்துறையை நோக்கி ஆம்னி வேனில் சென்று கொண்டிருந்தனர்.
சங்ககிரி அருகே உள்ள சின்னா கவுண்டனூர் பகுதிக்கு சென்றபோது, தேசிய
நெடுஞ்சாலையோரமாக நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதியது. இதில், பிரியா, ஒரு வயது குழந்தை சஞ்சனா உள்பட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பலத்த காயமடைந்த ஓட்டுநர் விக்னேஷ், ராஜதுரை மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த விபத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.







