ஒடிசாவில் ரயில் விபத்துக்குள்ளான பகுதியை மேற்க வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேரில் சென்று பார்வையிட்டார்.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு நேற்று மாலை வந்து கொண்டிருந்த கோரமண்டல் ரயில், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரம் அருகே பஹனகா என்ற பகுதியில் சரக்கு ரயிலுடன் மோதிய விபத்தில் 12 பெட்டிகள் தடம்புரண்டன. அதே நேரத்தில் மற்றோரு தடத்தில் வந்த யஷ்வந்தபூர் – ஹவுரா ரயில், தடம்புரண்டு விழுந்த பெட்டிகள் மீது மோதியது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 280 ஆக உயர்ந்துள்ளது. படுகாயமுற்ற 900-க்கும் மேற்பட்டோர் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மேற்குவங்காள அரசு நேற்று இரவே மீட்பு பணிகளை மேற்கொள்ள சிறப்பு குழுவை ஒடிசாவுக்கு அனுப்பி வைத்தது.
இதனிடையே கோர ரயில் விபத்து குறித்து ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்னாக்கிடம் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தொலைபேசியில் கேட்டறிந்தார். இந்நிலையில், விபத்து நடந்த இடத்திற்கு ஹெலிகாப்டரில் சென்று மம்தா பானர்ஜி பார்வையிட்டார்.







