#Chennai உள்பட 20 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை!

சென்னை உள்பட 20 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துடன் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலருக்கு தொடர்பிருப்பதாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு (என்.ஐ.ஏ)ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தமிழ்நாடு விரைந்தனர். தமிழ்நாடு வந்தடைந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று அதிகாலை முதலே அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள் : அஜித்குமாருக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் #Rajinikanth!

இந்த சோதனை சென்னை உள்பட சுமார் 20 இடங்களில் நடைபெற்று வருகின்றன. அதன்படி, சென்னையில் புரசைவாக்கம் பகுதியிலுள்ள ஓர் அடுக்குமாடிக் கட்டடம் உள்பட மொத்தம் 5 இடங்களிலும், மயிலாடுதுறை சுற்றுவட்டாரத்தில் 15 இடங்களிலும் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடைபெற்று வருகிறது.

என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளதால் அப்பகுதிகளில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. சோதனை நிறைவடைந்த பின்னரே ஏதேனும் ஆவணங்கள் சிக்கியுள்ளதா அல்லது தகவல் ஏதும் தெரியவந்ததா என்பது குறித்து தெரிய வரும் என கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.