விஜய் மக்கள் இயக்கத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக வரும் 9ஆம் தேதி சென்னை பனையூரில் மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
விஜய் மக்கள் இயக்கத்தை வலுப்படுத்த அரசியல் கட்சிகளில் இருப்பதைப் போன்று பல்வேறு அணிகள் உருவாக்கப்பட்டு அதற்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் சில வாரங்களுக்கு முன்பு அந்த இயக்கத்தின் வழக்கறிஞர் அணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக தற்போது விஜய் மக்கள் இயக்க மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம் வரும் 9ஆம் தேதி நடைபெறவுள்ளது. பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் காலை 10.35 மணிக்கு நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கேட்டுக் கொண்டுள்ளார்







