நியூஸ் 7 தமிழ் நடத்தும் “வாசிப்போம் நேசிப்போம்” நிகழ்ச்சியில், பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
நியூஸ் 7 தமிழ் மற்றும் ரோட்டரி கிளப்பின் நெய்தல் பிரிவு சார்பில், ”வாசிப்போம் நேசிப்போம்” என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்த இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்தவகையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசினர் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வாசிப்போம், நேசிப்போம் நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். இதில், எழுத்தாளர் மன்னர்மன்னன் கலந்து கொண்டு புத்தக வாசிப்பின் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.
இதுதொடர்பாக பேசிய பள்ளியின் தலைமை ஆசிரியை வெற்றிச்செல்வி, புத்தகங்களின் அவசியம் பற்றி மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்த முன்னெடுப்பை நியூஸ் 7 தமிழ் எடுத்துள்ளதாக தெரிவித்தார்.