தி லெஜண்ட் படத்தின் ஹிந்தி வெளியீட்டு உரிமையை கணேஸ் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இப்படத்தின் தெலுங்கு டிரைலர் இன்று மாலை வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து அதிரடி நாயகனாக அறிமுகமாகும் ‘தி லெஜண்ட்’ படம், ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் டிரைலர் 29 மில்லியன் பார்வைகளையும், மொசலோ மொசலு பாடல் 14 மில்லியன் மற்றும் வாடிவாசல் பாடல் 18 மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ள நிலையில், முதல் படம் வெளிவருவதற்கு முன்பே தான் ஒரு லெஜண்ட் என தடம் பதித்திருக்கிறார் லெஜண்ட் சரவணன்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
எமோஷன், ஆக்ஷன், காதல், காமெடி என அனைத்தும் ஒருங்கிணைந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து மக்களும் மீண்டும் மீண்டும் படம் பார்க்கும் வகையில், சகமர்சியல் மாஸ் படமாக உருவாகியுள்ளது. பான் இந்தியா அளவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் மிகுந்த பொருட்செலவில் மிகப்பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம் ஜூலை 28 அன்று வெளியாகவுள்ளது.
தனி பாடல் மூலம் உலகமெங்கும் பிரபலமான மும்பை மாடல் ஊர்வசி ரவுத்தலா தி லெஜண்ட் திரைப்படத்தின் வாயிலாக கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். சின்னத் திரைக் கலைவாணர் விவேக் கடைசியாக இப்படத்தில் நடித்துள்ளார். யோகி பாபு முக்கிய வேடத்தில் லெஜண்ட் சரவணனுடன் படத்தில் பயணிக்கிறார். படத்தில் இடம்பெறும் அனைத்து கதாப்பாத்திரங்களிலும் பிரபல நட்சத்திரங்கள் லெஜண்ட் சரவணனுடன் இணைந்துள்ளனர்.
கோபுரம் சினிமாஸ் ஜி.என்.அன்புச்செழியன், அதிக முன் பணம் கொடுத்து தமிழகம் முழுவதும் இத்திரைப்படத்தை வெளியிடும் உரிமையைப் பெற்றிருக்கிறார். கேரளாவில் தி லெஜண்ட் படத்தின் வெளியீட்டு உரிமையை மேஜிக் பிரேம்ஸ் நிறுவனத்தின் விநியோகஸ்தர் லிஸ்டின் ஸ்டீபன் வாங்கியுள்ளார்.
#TheLegend@VelrajR @AntonyLRuben @moorthy_artdir @ActionAnlarasu @Vairamuthu @madhankarky #RajuSundaram @BrindhaGopal1 #Dinesh @UrvashiRautela @iamlakshmirai @Actor_Vivek @actornasser @iamyashikaanand #Prabhu #Vijayakumar @NjSatz pic.twitter.com/Q4GXO6oU4B
— The Legend (@_TheLegendMovie) July 16, 2022
இந்நிலையில், தி லெஜண்ட் படத்தின் ஹிந்தி வெளியீட்டு உரிமையை கணேஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் விநியோகஸ்தர் நம்பிராஜன் வாங்கியுள்ளார். இதனை படக்குழுவினர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள ட்விட்டர் பதிவில், தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன் நிறுவனம் கணேஸ் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#TheLegendSaravanan starring #TheLegendMovie Official Telugu Trailer to be released by @tamannaahspeaks by today at 05.30 PM
Worldwide release on July 28th#TheLegendSaravanaStoresProduction #TheLegend #TheLegendFromJuly28@jdjeryofficial @Jharrisjayaraj pic.twitter.com/m4fIAHYaYR
— The Legend (@_TheLegendMovie) July 16, 2022
மேலும், தி லெஜண்ட் சரவணன் படத்தின் தெலுங்கு டிரைலர் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். படத்தின் டிரைலரை பிரபல நடிகை தமன்னா வெளியிடவுள்ளார்.
-ம.பவித்ரா